மீண்டும் கிம் - ட்ரம்ப் சந்திப்பு ?

மீண்டும் கிம் - ட்ரம்ப் சந்திப்பு ?
மீண்டும் கிம் - ட்ரம்ப் சந்திப்பு ?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை நேரில் சந்திக்காமலே அவருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா, தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதனை செய்தது. இதையடுத்து வட கொரியாவுக்கு உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. குறிப்பாக வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்தச் சூழலில் அமெரிக்காவும், வடகொரியாவும் திடீரென தோளோடு, தோள் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு அதிரடியான அதிசய சந்திப்பை நடத்தியது. பின்னர் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியிலேயே நிறைவடைந்ததால் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் கிம் ஜாங் உன்னை சீன அதிபர் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். குறிப்பாக வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது குறித்து விவாதித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கிம் ஜாங் உன்னை நேரில் சந்திக்காமலே அவருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு பிறகு டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியா செல்ல திட்டமிட்டுள்ளார். அப்போது தாம் நிறைய தலைவர்களை சந்திக்கவிருப்பதாகவும், ஆனால் கிம் ஜாங் உன்னை சந்திக்கப்போவதில்லை என அவர் கூறியுள்ளார். அவருடன் வேறு வடிவில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com