\
US President Donald Trump renews $1,00,000 fee on H-1B visas
TRUMPANI

H-1B விசாவுக்கு ரூ.96 லட்சம் கட்டணம்.. ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. இந்தியர்களுக்கு அதிர்ச்சி!

இந்திய ஐடி ஊழியர்கள் மற்றும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இந்தியர்களுக்கு H-1B விசா முக்கியமான வழியாக இருந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on

செய்தியாளர் - M. மீரா

அமெரிக்காவில் வெளிநாட்டில் இருக்கும் திறமையான பணியாளர்கள் பணிபுரிய உதவும் H-1B விசா திட்டம் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. குறிப்பாக, புதிய H-1B விண்ணப்பங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள $100,000 (கிட்டத்தட்ட ரூ.96 லட்சம்) கட்டணம் 2027 செப்டம்பர் 21 வரை தொடரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்திய ஐடி ஊழியர்கள் மற்றும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இந்தியர்களுக்கு H-1B விசா முக்கியமான வழியாக இருந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

H-1B visa
H-1B visa reuters

2025 செப்டம்பரில் முதன்முதலாகக் கொண்டுவரப்பட்ட $100,000 கட்டணத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்கும் பிரகடனத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். H-1B பணியாளர்களின் புதிய விண்ணப்பங்களுக்கும் இந்த கட்டணம் பொருந்தும். தேசிய நலன் கருதி விலக்கு வழங்கும் அதிகாரமும் அரசிடம் உள்ளது.

US President Donald Trump renews $1,00,000 fee on H-1B visas
H-1B விசா கட்டணத்தை உயர்த்த திட்டம்.. இந்தியர்களுக்கு கூடுதலாக ரூ.99 லட்சம் செலவு!

மேலும், H-1B விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் சமீபத்தில் அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதா அல்லது அத்தகைய நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளதா என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

H-1B திட்டத்தைச் சில நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதால், அது அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கிறது எனவும் ட்ரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் குறைந்த ஊதிய வேலைகளுக்கான H-1B நியமனங்களைக் குறைத்து, அதிக திறமை மற்றும் அதிக ஊதிய பணியாளர்களை நோக்கி திட்டத்தை மாற்றுவதே நோக்கம் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

H!b visa
H!b visa reuters

2025இல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தபிறகு, மிகப்பெரிய ஐடி அவுட்சோர்சிங் நிறுவனங்கள் தாக்கல் செய்த H-1B பதிவுகள் 92 சதவீதம் குறைந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

US President Donald Trump renews $1,00,000 fee on H-1B visas
H-1B விசாக்கள் 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பு? புதிய மசோதா தாக்கல்.. இந்தியர்களுக்குச் சிக்கல்?

இதற்கிடையே, $100,000 கட்டணத்தை அமல்படுத்தும் அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டப் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு அமெரிக்க நீதிபதி இந்த கட்டண உயர்வு சட்டவிரோதமானது என தீர்ப்பளித்த நிலையில், அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், H-1B விசா திட்டத்துக்காக 1,03,265 டாலரை புதிய நிரந்தர கட்டணமாக அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் அமெரிக்க நிர்வாகம் முன்வைத்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் H-1B விசா பெறுவதற்கான செலவு மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

US President Donald Trump renews $1,00,000 fee on H-1B visas
”எங்களைத் தாண்டி யாரும்..” கிரீன்லாந்தில் கால்பதிக்கும் அமெரிக்கா? ட்ரம்ப் போட்ட ஒப்பந்தம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com