\
TRUMP
TRUMPX

அடித்து ஆடும் ஈரான்.. கடும் கோபத்தில் டிரம்ப்! ’அழித்துவிடுவோம்’ என ஆவேசம்! - என்ன நடந்தது?

அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான்வழித் தாக்குதலை தொடங்கியுள்ளது.
Published on
Summary

ஈரான் அணு ஆயுதத் திட்டம் குறித்த மோதல் பல மாதங்களாக நீடிக்க, அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் இடையிடையே நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைந்த நிலையில், அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல். இதற்கு பதிலாக CENTCOM புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்க, டிரம்ப் ஈரானை கடுமையாக எச்சரித்து, ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

ஈரான் அணு ஆயுதத் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பல மாதங்களாக நீடித்து வரும் இந்த மோதலில், இடையிடையே தாக்குதல்கள் நிறுத்தப்பட்டும் மீண்டும் தொடங்கப்பட்டும் வருகின்றன. கடந்த சனிக்கிழமை, அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தது. ஆனால், இதுபோன்ற எந்தப் பேச்சுவார்த்தை அழைப்பும் வரவில்லை என்று ஈரான் மறுத்தது.

iran war
iran warweb

இந்த நிலையில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தத் தாக்குதல் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளைப் படையான CENTCOM, ஈரானில் உள்ள இலக்குகளை குறிவைத்து புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"ஈரான் மீண்டும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளைப் புறக்கணித்து வருகிறது. இந்தப் போக்கைத் தொடர்ந்தால் மிகக் கடுமையான பதிலடி கொடுப்போம். அவர்கள் மிகப் பெரிய தாக்குதலைச் சந்திப்பார்கள், அவர்களை அடித்து நொறுக்கிவிடுவோம்" என்று டிரம்ப் எச்சரித்ததாகவும், மேலும் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை கடுமையாக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trump
TrumpWeb

மீண்டும் ஈரான் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com