US Politician Burns Quran Shares Video
வாலண்டினா கோம்ஸ் எக்ஸ் தளம்

அமெரிக்கா |குர் ஆனை எரித்து சபதமிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர்!

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஒருவர், புனித குர்ஆனின் நகலை எரித்து, மாநிலத்தில் இஸ்லாத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக சபதம் செய்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
Published on

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஒருவர், புனித குர்ஆனின் நகலை எரித்து, மாநிலத்தில் இஸ்லாத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக சபதம் செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஒருவர், புனித குர்ஆனின் நகலை எரித்து, மாநிலத்தில் இஸ்லாத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக சபதம் செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள 31வது காங்கிரஸ் மாவட்டத் தொகுதிக்குப் போட்டியிடும் குடியரசுக் கட்சி சார்பில், வாலண்டினா கோம்ஸ் என்பவர் போட்டியிடுகிறார். இவர், இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் நகலை எரித்து, மாநிலத்தில் இஸ்லாத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக சபதம் செய்துள்ளார். இதுதொடர்பான ஒரு வீடியோவில், ”டெக்சாஸில் இஸ்லாத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது குறிக்கோள். முஸ்லிம்கள் மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டும். அவர்கள் 57 முஸ்லிம் நாடுகளில் எங்கும் செல்லலாம். மேலும் தனது இலக்கை அடைய தனக்கு மக்கள் உதவ வேண்டும்” என வலியுறுத்தியுள்ள்ளார். அதேநேரத்தில், அவர் குர் ஆனை எரித்ததற்காக வருத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

US Politician Burns Quran Shares Video
”குரான், பைபிள் பற்றி எடுக்க முடியுமா?” - ஆதிபுருஷ் படம் பற்றி அலகாபாத் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com