நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியருக்கு நிகழ்ந்த கொடுமை: மீண்டும் போலீஸ் அராஜகம்..!

நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியருக்கு நிகழ்ந்த கொடுமை: மீண்டும் போலீஸ் அராஜகம்..!

நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியருக்கு நிகழ்ந்த கொடுமை: மீண்டும் போலீஸ் அராஜகம்..!
Published on

(கோப்பு புகைப்படம்)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் அமெரிக்க போலீசாரால் கொடூரமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கருப்பின இளைஞரான ஜார்ஜ் பிளாய்டு என்பவர் கடந்த மார்ச் 25 ஆம் தேதி அமெரிக்க போலீசாரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். கடை ஒன்றில் நடந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்ய சென்ற அமெரிக்க போலீசார், ஜார்ஜ் பிளாய்டின் கழுத்தில் தன்னுடைய காலினை வைத்து அழுத்தி பிடித்துள்ளார்.

மூச்சுத் திணறுகிறது என்று அவர் சொல்லியும்கூட போலீஸ் தன்னுடைய காலினை எடுக்கவில்லை. இதனால், ஜார்ஜ் பிளாய்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது. ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அமெரிக்காவைத் தாண்டியும் போராட்டங்கள் வெடித்தது.

அந்த வகையில்தான் அமெரிக்க போலீசாரின் அடக்குமுறை குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. நியூயார்க் நகரைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது, அமெரிக்க வாழ் இந்தியரின் கழுத்தில் அமெரிக்க போலீசார் முழங்காலினை வைத்து அழுத்துகிறார். அவர் பெயர் யோகேஷ்வர் கெயிந்தர் பெர்சவுத். போலீசார் அவரை கைது செய்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் எப்படியோ உயிர் பிழைத்துக் கொண்டார்.

இந்த கைது நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து செனெக்டடே தலைமைக் காவல் நிலையத்திற்கு முன்பு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்ஜ் பிளாய்டு சம்பவத்தை குறிப்பிட்டு இதனை பலரும் கண்டனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com