\
iran war
iran war web

மீண்டும் வெடிக்கும் ஈரான் மோதல்? அமெரிக்காவின் திட்டம் என்ன?

அமெரிக்கா -ஈரான் போர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது, மேலும் அதன் நிதிச் செலவை சாதாரண அமெரிக்கர்கள் உணர்ந்து வருகின்றனர். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் ஒரு சமரசத்தை எட்டுமாறும் நட்பு நாடுகள் டிரம்பை வலியுறுத்தி வருகின்றன.
Published on
Summary

அமெரிக்கா-ஈரான் சமாதான பேச்சுவார்த்தைகள் முடங்கிய நிலையில், ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்க பென்டகன் ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி 2.0’ திட்டமிடுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, அணு ஆயுதத் தடை உள்ளிட்ட கோரிக்கைகளை ஈரான் ஏற்காததால், டிரம்ப் சமாதான முன்மொழிவுகளை நிராகரித்து, பதற்றம் மீண்டும் உயரும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் போரில் நிரந்தர தீர்வை எட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் தயார் செய்து வருவதாக 'தி நியூயார்க் டைம்ஸ்' வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 7-ஆம் தேதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து, டிரம்ப் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அச்செய்தி அறிக்கை கூறுகிறது.

Iran hits back at Donald Trump over remark
trump & mojtaba Pt web

ஈரான் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது போன்ற அமெரிக்காவின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி டிரம்ப் ஈரானின் சமாதான பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவுகளை நிராகரித்து வருகிறார்.

iran war
BRICS கூட்டத்தில் வெடித்த சர்ச்சை.. மோதிக்கொண்ட இரு நாடுகள்! தீயை பற்றவைத்த இஸ்ரேல்!

அதனால் ஈரானை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் தனது முதன்மை இலக்கை அமெரிக்கா இன்னும் எட்டாத நிலையில், மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

iran war
iran war web

வரும் நாட்களில் 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி 2.0' (Operation Epic Fury 2.0) நடவடிக்கையை மேற்கொள்ள பென்டகன் திட்டமிட்டு வருவதாகவும் தேவைப்பட்டால், பதற்றத்தை அதிகரிக்கச் செய்வதற்கான ஒரு திட்டம் தங்களிடம் உள்ளது எனவும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். மேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

iran war
கொலம்பியா| செயற்கையாக உருவாக்கப்படும் 3 கோடி கொசுக்கள்.. என்ன காரணம்..?

இது குறித்து ஈரான் அதிகாரிகள் மீண்டும் மோதல்களில் ஈடுபடத் தாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Mohammad-Bagher Ghalibaf
Mohammad-Bagher Ghalibafweb

மேலும் எத்தகைய ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்க எங்கள் ஆயுதப் படைகள் தயாராக உள்ளன; தவறான உத்திகளும் தவறான முடிவுகளும் எப்போதும் தவறான விளைவுகளையே ஏற்படுத்தும். நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளுக்கும் தயாராக இருக்கிறோம், அவர்கள் ஆச்சரியப்படுவார்கள் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.

iran war
‘கொசுப்படை’ | ஹார்முஸ் நீரிணையை நெரிக்கும் ஈரானின் கப்பல்கள் கூட்டம்.. மிரளும் அமெரிக்கா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com