மூளும் போர் மேகம் - சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி தைவானில் தரையிறங்கினார் நான்சி பெலோசி

மூளும் போர் மேகம் - சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி தைவானில் தரையிறங்கினார் நான்சி பெலோசி
மூளும் போர் மேகம் - சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி தைவானில் தரையிறங்கினார் நான்சி பெலோசி

சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி தைவானில் தரையிறங்கினார் அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி.

அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை திங்கட்கிழமை தொடங்கினார். இதனிடையே தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பினை தெரிவித்ததோடு, தைவானுக்குள் நான்சி பெலோசி நுழைந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனால், தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை ஆக்கிரமிப்பதில் மும்முரமாக இருந்தும் வரும் சீனா, தமது நாட்டின் ஒரு பகுதியாக தைவானை கூறி வருகிறது. மட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது.

இந்த நிலையில், தைவானில் சீனா நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து  கேட்டறிய அங்கு நான்சி பெலோசி இன்று செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சீனாவின் எதிர்ப்பையும் மீறி நான்சி பெலோசி பயணிக்கும் விமானம் தைவானின் வான்வெளிக்குள் நுழைந்தது. கடும் எச்சரிக்கையை மீறி தைவானில் தரையிறங்கியிருக்கிறார் நான்சி பெலோசி. அவருக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நான்சி வந்திறங்கிய நேரத்தில் தைவான் நீரிணை பகுதியில் சீன போர் விமானங்கள் பறப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தைவான் பிராந்தியத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

அமெரிக்க வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், 'நான்சி பெலோசிக்கு தைவான் செல்ல உரிமை உள்ளது' என்று தெரிவித்துள்ளார். பெலோசி சென்ற விமானம், உலகில் அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற சாதனை படைத்துள்ளது.

இதையும் படிக்க: அய்மன் அல்-ஜவாஹிரி கொலை.. அல்கொய்தாவின் அடுத்த தலைவர் இவரா? - அதிர வைக்கும் பின்னணி

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com