நீதிமன்ற உத்தரவையடுத்து மூன்றாம் பாலினத்தவரை அமெரிக்க ராணுவத்தில் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் முதன்முறையாக மூன்றாம் பாலித்தனவர் சேர்க்கப்படவுள்ளனர். அவர்களை ராணுவத்தில் சேர்க்க அரசு விதித்த தடை செல்லாது என்று வாஷிங்டன் மற்றும் விர்ஜீனியா மாகாண நீதிமன்றங்கள் அறிவித்தன. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாளை மறுதினம் முதல், அதாவது புத்தாண்டு முதல் அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலித்தனவர் சேர்க்கை தொடங்கவுள்ளது.