ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

இஸ்லாமிய ‌நாடுகளைச்‌ சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர விதிக்கப்பட்ட ‌தடைக்கு நீதிமன்றம் பிறப்பித்த தடையை எதிர்த்து அரசு ‌வழக்கு தொடர்ந்துள்ளது.

சிரியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பி‌றப்பித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை எடுத்ததாக ட்ரம்ப் கூறி வந்த நிலையில், அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சீயாட்டில் நகரில் மாவட்ட நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் என்பவர் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பித்தார். இந்த உத்த‌ரவு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகக் கரு‌தப்படுகிறது. அதன் விளைவாக, நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு ‌எதிராக அமெரிக்க அரசு வழக்கு‌த் தொ‌டர்ந்துள்ளது‌ நீதிமன்றத்தின்‌ உத்தரவு மிக மோசமானது என கருத்துத் தெரிவித்துள்ள ட்ரம்ப், இதன் காரணமாக அபாயகரமான நபர்கள் நாட்டிற்குள் நுழைந்துவிடுவர் கூறி ‌எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com