மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா தீவிரம்

மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா தீவிரம்
மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா தீவிரம்

ஜெய்ஷ்-இ-முகமது என்கிற பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்க்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அமெரிக்கா ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு‌ வரைவு தீர்மானம் அனுப்பியுள்ளது.

காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்புக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கக்கோரி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்‌ட நாடுகள் கடந்த மாதம் 27ஆம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. 

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும்,சீனா மீண்டும் மீண்டும் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில், மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்க்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

அதற்காக 15 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு‌ வரைவு தீர்மானத்தை அமெரிக்க அனுப்பியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா இந்த வரைவு தீர்மானத்தை அனுப்பியுள்ளது. ஏற்கெனவே இந்தியா மேற்கொண்ட தடை முயற்சியை சீனா வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்ததால், வேறு வழியில் மசூத் அசாருக்கு நெருக்கடி தர அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. கருப்பு பட்டியலில் மசூத் அசார் சேர்க்கப்பட்டால் அவரால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com