இந்திய ஐடி துறைக்கு புதிய சவால்.. அச்சுறுத்தும் அமெரிக்க மசோதா!
வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 25% வரி விதிக்க வழிசெய்யும் சட்ட மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆளும் குடியரசு கட்சி உறுப்பினரான பெர்னி மொரினோ (BERNIE MORENO) தாக்கல் செய்தார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 25% வரி விதிக்க வழிசெய்யும் சட்ட மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆளும் குடியரசு கட்சி உறுப்பினரான பெர்னி மொரினோ (BERNIE MORENO) தாக்கல் செய்தார். அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டவர்களுக்கே வேலை வாய்ப்பை அளிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மட்டுமல்லாமல் இறக்குமதி செய்யும் சேவைகளுக்கும் வரியை அதிகரிக்கலாம் என அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் நவாரோ கூறியிருந்தார். சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய ஐ.டி.துறை அமெரிக்காவையே பெரிதும் சார்ந்துள்ளது.
இந்தியாவின் பல ஐடி நிறுவனங்கள் 30 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு அயல்பணிச் சேவையை அளித்து வருகின்றன. இந்திய நிறுவனங்களின் அயல்பணிச் சேவையில் 60% அமெரிக்கா மூலம் மட்டுமே கிடைக்கிறது. இதன்மூலம் சில கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஐ.டி.துறை மட்டுமே சுமார் 8% பங்களிப்பை வழங்குகிறது. ஏற்கெனவே அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் இந்திய தொழில்நிறுவனங்கள் சிக்கலை சந்தித்துவரும் நிலையில் தற்போது ஐ.டி. துறையும் புதிய சவாலை சந்திக்க உள்ளது.