ஒரு புகைப்படம் 10டாலர்: காட்டுத்தீ மீட்புப் பணிக்கு பணம் வசூல் செய்த இன்ஸ்டா மாடல்!

ஒரு புகைப்படம் 10டாலர்: காட்டுத்தீ மீட்புப் பணிக்கு பணம் வசூல் செய்த இன்ஸ்டா மாடல்!

ஒரு புகைப்படம் 10டாலர்: காட்டுத்தீ மீட்புப் பணிக்கு பணம் வசூல் செய்த இன்ஸ்டா மாடல்!
Published on

நிர்வாண புகைப்படங்களை அனுப்பி ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்காக 7 லட்சம் டாலர்களை இன்ஸ்டா மாடல் ஒருவர் வசூல் செய்துள்ளார்

கைலன் வார்ட் (20) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டா மாடல் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம். இவர் கடந்த 4-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், என்னுடைய நிர்வாண புகைப்படங்களை தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்புகிறேன். அதற்காக அவர்கள் $10 அனுப்ப வேண்டும். இந்த தொகை ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். அவருக்கு இரண்டே நாட்களில் $7 லட்சம் வசூல் ஆகியுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.5 கோடி.

இது குறித்து மீண்டும் பதிவிட்ட அவர், இது உண்மைதானா? என் ட்வீட்டின் எதிரொலியாக ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்கு $7 லட்சம் வசூல் ஆகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில் வசூல் செய்த பணத்தை கைலன் காட்டுத்தீ மீட்புப்பணிக்கு பயன்படுத்தாமல் ஏமாற்றுவதாக புகார்களும் எழுந்தன.

அதற்கு பதிலளித்த அவர், என் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. நான் வசூல் செய்த பணத்தை எனக்காக பயன்படுத்தவில்லை. வேண்டுமென்றால் பணம் அனுப்புபவர்கள் ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்பு நிவாரண நிதிக்கு நேரடியாகவே அனுப்பலாம். அதற்காக ஆதாரத்தை மட்டும் எனக்கு அனுப்புங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கைலன் வார்டின் இன்ஸ்டா பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. புதிய முயற்சி மூலம் காட்டுத்தீ மீட்புப்பணிக்கு பணம் வசூல் செய்யும் கைலன் வார்ட்டுக்கு சிலர் பாராட்டுகளையும், சிலர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com