அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு கொரோனோ தொற்று இன்று உறுதியாகி உள்ளது. தான் நலமாக இருப்பதாக அவர் ட்விட்டரில்  தெரிவித்துள்ளார்

2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் முதன்முதலாக பரவத்துவங்கி உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது கொரோனா. இந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதி கலங்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45.63 கோடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 8.11 கோடியைக் கடந்து விட்டது.

இந்நிலையில், அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தொண்டையில் வலி இருந்தது. இருந்தாலும் நலமாகவே உள்ளேன். நானும் எனது மனைவியுமான மிச்செல் இருவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டோம். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. தொற்றுகள் குறைந்தாலும் கூட நீங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்றால் விரைவில் தடுப்பூசி எடுத்துகொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார் ஒபாமா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com