அமெரிக்கப்படை
அமெரிக்கப்படைpt web

உலகெங்கும் பரவியிருக்கும் அமெரிக்காவின் 'ஆக்டோபஸ்' கரங்கள்..!

அமெரிக்க ராணுவத்தின் இரும்புக்கரங்கள் உலகெங்கும் நீண்டுள்ளன. எங்கெல்லாம் அதன் பிடி இருக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்...
Published on

அமெரிக்க ராணுவத்தின் இரும்புக்கரங்கள் உலகெங்கும் நீண்டுள்ளன. எங்கெல்லாம் அதன் பிடி இருக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்...

சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஈரானை தாக்கியுள்ளது அமெரிக்கா. இவ்வளவு தொலைவிலிருந்து ஒரு நாடு மற்றொரு நாட்டை தாக்குவது மிகமிக கடினம். ஆனால் அமெரிக்காவுக்கு இது எளிதானது. எப்போது வேண்டுமானாலும் எந்த நாடு மீது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் வகையில் அமெரிக்கா தனது படைகளை பரவலாக நிறுத்திவைத்துள்ளதான் இதற்கு காரணம்.

சுமார் 80 நாடுகளில் 800 ராணுவ தளங்களை அமெரிக்கா வைத்துள்ளது. சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் பல்வேறு நாடுகளில் நிலைகொண்டுள்ளனர். ஆசிய கண்டத்தில் எப்போதும் கொந்தளிப்பாகவே இருக்கும் மத்திய கிழக்கில் 19 இடங்களில் 50 ஆயிரம் வீரர்களை அமெரிக்கா நிறுத்திள்ளது. ஓமன், கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக். சவுதி அரேபியா ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்காவின் படைகள் உள்ளன.

ஜப்பானில் அதிகபட்சமாக 14 தளங்களை அமெரிக்கா வைத்துள்ளது. இங்கு 53 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். தென்கொரியாவில் 8 தளங்களில் 23 ஆயிரத்து 732 பேர் உள்ளனர். பிலிப்பைன்ஸ், தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா தன் படைகளை நிறுத்தியுள்ளது. ஐரோப்பாவில் ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அமெரிக்க படைகள் உள்ளன.

இவை தவிர மேலும் பல நாடுகளில் சிறிய அளவில் அமெரிக்க படைகள் நிலைகொண்டுள்ளன. சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த தளங்கள் அமைந்துள்ளன. உலகின் வல்லரசு என அமெரிக்கா கருதப்படுவதற்கு அதன் உலகளவிய ஆக்டோபஸ் கரங்களே முக்கிய காரணமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com