\
war planes
war planes PT

நடு வானில் 2 அமெரிக்கா போர் விமானங்கள் மோதி விபத்து.!

இடாஹோவில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் மோதியதால் விபத்து நடந்தது.
Published on

மேற்கு இடாஹோவில் (Idaho) உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Gunfighter Skies Air Show என்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது, ​​அமெரிக்க கடற்படையின் இரண்டு EA-18G கிரௌலர் ரக போர் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன.

விமான சாகச நிகழ்ச்சியின்போது, ​​இரண்டு அமெரிக்க கடற்படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில், அந்த விமானங்களில் பயணித்த நான்கு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறினர் .

தளத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில், விமானங்கள் நெருங்கிய அணிவகுப்புச் சாகசங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

war planes
ஈரான் போர் | அதிகாரம், எண்ணெய், செல்வாக்கு – யார் யாருக்கு என்ன வேண்டும்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com