\
Iran Behind Suspected Bomb Plot at UK Airbase
RAF Fairford airbasereuters

உச்சகட்ட பயத்தில் அமெரிக்கா.. பிரிட்டன் விமானத் தளங்களை காலி செய்யும் ட்ரம்ப்!

அமெரிக்கா - பிரிட்டன் விமானத் தளங்களில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

மத்திய கிழக்கில் அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியதைத் தொடர்ந்து, 8 மாதங்களை கடந்தும் போர் நீடித்து வருகிறது. இந்த மோதல் தற்போது சர்வதேச எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியைக் (Strait of Hormuz) கட்டுப்படுத்தும் நோக்கிலும் விரிவடைந்துள்ளது.

இந்த போரின் போது ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த இங்கிலாந்தில் உள்ள RAF Fairford விமானத் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வந்தது .

RAF
RAFreuters

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இத்தளத்தைக் குறிவைத்து தீவிரவாதத் தாக்குதலுக்குச் சதிதிட்டம் தீட்டப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஈரானின் தலையீடு இருக்கலாம் என்றும் இந்த தளத்தில் உள்ள போர் விமானங்கள் மீது நாசவேலை அல்லது தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டனின் RAF விமானதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த B-1B லான்சர் விமானங்கள் அமெரிக்காவுக்கு திரும்ப அழைக்கப்பட்டது.

மேலும், இங்கிலாந்தில் இருக்கும் மற்றுமொரு தளமான RAF Mildenhall விமானப்படை தளத்தை அமெரிக்கா முக்கியமாக தனது 'வான்வழி எரிபொருள் நிரப்பும்' (Aerial Refueling) மற்றும் 'வான்வழி உளவு' (Reconnaissance) நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவத் தளங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, 'எஃப்சிஓஎன் சார்லி' (FPCON Charlie) என்ற உயர் பாதுகாப்பு நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது .

RAF Mildenhall
RAF Mildenhall reuters

இதன் காரணமாக, இங்கிலாந்தில் இருக்கும் RAF Mildenhall தளத்திலிருந்தும் போர் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் நிரப்பும் விமானங்களை அமெரிக்கா தற்போது அவசரமாக வெளியேற்றியுள்ளது. இத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் திங்கள்கிழமை ஜெர்மனிக்கு மாற்றப்பட்டதாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த மேலும் சில விமானங்களும் ஜெர்மனி உள்ளிட்ட வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், RAF Mildenhall விமானப்படை தளத்துக்கு விடுக்கப்பட்ட குறிப்பிட்ட அச்சுறுத்தல் என்ன என்பது குறித்த விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Lancer flights
Lancer flightsreuters

ஆனால் இதற்கு காரணம் ஈரானிடமிருந்து நேரடியாகக் கிடைத்த தீவிரமான தாக்குதல் அச்சுறுத்தல்களே என்றுக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மற்ற நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து தாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்றும், செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப விமானங்களும் பிற ராணுவத் தளவாடங்களும் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

Iran Behind Suspected Bomb Plot at UK Airbase
அடுத்த செர்னோபிலாக மாறும் உக்ரைன்? ஆபத்தில் அணு உலைகள்!