அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு கிரெட்டா தன்பர்க் ஆதரவு!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு கிரெட்டா தன்பர்க் ஆதரவு!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு கிரெட்டா தன்பர்க் ஆதரவு!
Published on
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க்.
 
சுவீடனைச் சேர்ந்த 17 வயது சிறுமியான கிரெட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனியொரு ஆளாக போராட்டம் நடத்தினார். இதன் மூலம் உலகளவில் பிரபலமான கிரெட்டா தன்பர்க் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார்.
 
 
வழக்கமாக அரசியல் ரீதியிலான கருத்துக்களை தவிர்த்துவந்த கிரெட்டா தன்பர்க், தற்போது முதல்முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
 
‘’நான் ஒருபோதும் கட்சி அரசியலில் ஈடுபட மாட்டேன், ஆனால் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தல் எல்லாவற்றிற்கும் மேலானது என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்த கிரெட்டா தன்பர்க், தனது ஆதரவை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு வெளிப்படையாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com