\
us china russia leaders historic meeting
us china russia leaders historic meetingReuters

முதல் முறையாக ஒரே மேடை.. வரலாறு படைத்த அமெரிக்கா, சீனா, ரஷ்யா

உலகின் மூன்று மிகப்பெரிய அணு ஆயுத வல்லரசுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் முதன்முறையாக ஒரே மேடையில் சந்தித்து வரலாறு படைத்துள்ளனர்.
Published on: 

சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் நடைபெற்ற ஏபெக் (APEC) உச்சிமாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்குப் பிறகு, மூன்று தலைவர்களும் இணைந்து அமைதியை நோக்கிய பிரகடனம் என்ற நான்கு அம்சக் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

us china russia leaders historic meeting
us china russia leaders historic meetingReuters

இதில் முக்கியமாக, அணுஆயுதப் போர் ஒருபோதும் நடத்தப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்திய தலைவர்கள், அணு ஆயுத அபாயங்களைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக்கொண்டனர். மேலும், ஈரான் போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி, விநியோகத்தை அதிகரிக்கவும், ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் சம்மதித்துள்ளனர். அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மீறல்களுக்கு எதிராகவும் அவர்கள் ஒருமித்த குரல் எழுப்பியுள்ளனர்.

இருப்பினும், உலகம் பெரிதும் எதிர்பார்த்த உக்ரைன் போர், ஈரான் மோதல், வர்த்தகப் பூசல்கள் குறித்து இந்தக் கூட்டறிக்கையில் எந்தவொரு உறுதியான தீர்வும் எட்டப்படவில்லை. உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நகர்வதாக ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தாலும், உக்ரைன்தான் விட்டுக்கொடுக்க வேண்டும் என புதின் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மொத்தத்தில், சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புதினுக்கு இது ஒரு ராஜதந்திர வெற்றியாகவும், தனது செல்வாக்கை நிரூபிக்கும் களமாகவும் அமைந்துள்ளது.