\
US Buys Russian Diesel but Threatens India with Tariffs
TRUMPANI

ரஷ்யாவிடம் டீசல்.. Double Game ஆடும் அமெரிக்கா.. ட்ரம்பின் முடிவால் வெடிக்கும் சர்ச்சை!

அதேநேரத்தில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
Published on: 

அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து முதற்கட்டமாக 3,00,000 டன் டீசல் கொள்முதல் செய்ய ரஷ்ய அதிபர் புடினுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது, உலக நாடுகளிடம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ப் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான எண்ணெய் விநியோகத் தடைகளால் ஏற்பட்ட உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதைத் தடுக்க, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்களைப் பெறுவதற்கு அமெரிக்கா சில தற்காலிகத் தடைக் விலக்குகளை நீக்கியது. இதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை மீண்டும் பெற்று வருகின்றன. அதேநேரத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100% வரை கூடுதல் சுங்க வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Reuters

இந்த நிலையில்தான், அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து முதற்கட்டமாக 3,00,000 டன் டீசல் கொள்முதல் செய்ய ரஷ்ய அதிபர் புடினுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருப்பது உலக அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அமெரிக்க நிதித்துறை தற்காலிக உரிம விலக்கையும் அளித்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும் தனது சொந்த நாட்டின் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் ரஷ்ய எரிபொருளுக்குத் தளர்வுகள் அளிக்கும் அமெரிக்கா, தங்களது நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்காக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் ஆசிய நாடுகள் மீது வரிவிதிப்பு மற்றும் தடைகளை அச்சுறுத்தலாகப் பயன்படுத்துவது ராஜதந்திர அளவில் 'இரட்டை நிலைப்பாடு' என்கிற உலக நாடுகளின் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com