\
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய விண்கலத்தில் பூமிக்கு திரும்பிய அமெரிக்க வீரர்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய விண்கலத்தில் பூமிக்கு திரும்பிய அமெரிக்க வீரர்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய விண்கலத்தில் பூமிக்கு திரும்பிய அமெரிக்க வீரர்
Published on: 

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 355 நாட்களுக்குப் பின், அமெரிக்க வீரர் ஒருவர் ரஷ்ய விண்கலத்தில் பூமிக்கு திரும்பியுள்ளார்.

அவருடன் ரஷ்ய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த இருவரும் பூமிக்கு திரும்பியுள்ளனர். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க வீரர், தனது விண்வெளி பயணத்தை நிறைவு செய்துவிட்டு, ரஷ்ய விண்கலமான சோயுஸ் எம் எஸ்-19-ல் பூமி திரும்பியுள்ளார். கஜகஸ்தானில் விண்கலம் தரையிறங்கியுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பால், ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்ய விண்கலத்தில் அமெரிக்க வீரர் பூமிக்கு திரும்பியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com