\
பயங்கரவாதிகளை ஒடுக்குங்கள் - பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா

பயங்கரவாதிகளை ஒடுக்குங்கள் - பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா

பயங்கரவாதிகளை ஒடுக்குங்கள் - பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா
Published on: 

பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நேற்று பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது குண்டு வீசியது. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே பயங்கரவாதிகள் செயல்படுவது நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முன்னதாக புல்வாமா தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்து இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,  புல்வாமா சம்பவத்திற்கு பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. இரு நாடுகளுக்குள் அமைதியை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்வோம் என தெரிவித்திருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com