உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகள் ; இது போருக்கான காலம் அல்ல - பிரதமர் மோடி

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகள் ; இது போருக்கான காலம் அல்ல - பிரதமர் மோடி

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகள் ; இது போருக்கான காலம் அல்ல - பிரதமர் மோடி
Published on

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி ஆறு மாத காலம் கடந்துவிட்டது. போர் தொடங்கியது முதலே உக்ரைனுக்கு அமெரிக்க உதவிகள் வழங்கிவருகிறது. இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான ராணுவ உதவிகளை வழங்கி வந்த அமெரிக்கா தற்போது மேலும் ஏவுகணை உள்ளிட்ட 600 மில்லியன் டாலர் ஆயுத உதவியை வழங்க அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்தது. இந்த மாநாட்டின் போது ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி பேசியது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. காரணம், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்த பின்னர் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியது இதுவே முதல் முறை.

ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கூறுகையில், "இது போருக்கான காலம் அல்ல. நான் உங்களிடம் தொலைப்பேசி அழைப்பின்போது பல முறை இதைப் பேசி இருக்கிறேன். ஜனநாயகம், ராஜதந்திரம், பேச்சுவார்த்தை ஆகியவை உலகை ஒன்றாக வைத்திருக்கும்" என்றார். இதற்குப் பதிலளித்த புதின், ‘’ உங்கள் கவலைகள் பற்றி எனக்கு தெரியும். இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதையே நாங்களும் விரும்புகிறோம்” என்றுள்ளார்.

ஒருபக்கம் ரஷ்யாவை அழிக்க அமெரிக்கா , உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆயுத உதவிகள் செய்துகொண்டுள்ளது மறுபக்கம் ரஷ்யாவும் விடா படியாக நிற்கிறது. போரின் தாக்கம் விலைவாசி உயர்வில் முடிவதால் இதனால் ஆசிய, ஐரோப்பிய மக்களும் பாதிக்கப்படுவதால் , இந்தியா உட்பட மற்ற நாடுகளும் விரைவில் போர் முடிவுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com