டிரம்ப் எடுத்த முடிவால் அதிர்ச்சி.. தலைகீழாக மாறிய அமெரிக்கா.. இதுவரை நடக்காத சம்பவம்!
அமெரிக்க அரசு நிர்வாகம் மொத்தமாக முடங்கி, நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இந்த நிலைக்கு என்ன காரணம் விரிவாக பார்க்கலாம்!
அமெரிக்காவில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இவரது அதிரடி உத்தரவால் உலக நாடுகள் மட்டுமின்றி அமெரிக்க மக்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதில் வரிவிதிப்பு விவகாரமும் அடங்கும்..
அமெரிக்காவை பொறுத்தவரை அரசு செலவுகளுக்கான நிதியை விடுவிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இந்த நிதியாண்டிற்கான செலவு தீர்மானம் நிறைவேற்றுவதில் ஆளும் குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையே சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை..இதனால், நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசு முடங்கியுள்ளது..
அரசு செலவு செய்வதற்கு பணம் விடுவிக்கப்படாததால் அரசுத்துறை ஊழியர்கள் சம்பளம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக பல துறைகளில் கட்டாய பணி நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் அமெரிக்கா முழுவதும் 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, நியூயார்க், அட்லாண்டா, டென்வர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் 10 சதவீத விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இதனால் விமான பயணிகள் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த 2018ல் 35 நாட்கள் அரசு நிர்வாகம் முடங்கியதே பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது..ஆனால் தற்போது அந்த சாதனையை முறியடித்து 38 நாட்களாக அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது..இந்த முடக்கம் இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது தெரியாததால் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பொது மக்களும் கலக்கத்தில் உள்ளனர்..

