US Aircraft Severely Hit in Iran Missile Attack: Photos Emerge
அமெரிக்க விமானம்Pt web

இரண்டாக உடைந்த அமெரிக்க விமானம்.. ஈரானின் கொடூர தாக்குதல்.. நிலைகுலைந்த படைகள்!

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான விமானம் ஒன்று இரண்டாக உடைந்துள்ள புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் போராக பரிமாணம் அடைந்துள்ளது. சுமார் ஒரு மாதம் நடந்துவரும் இந்த போரில் ஈரானில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஈரான் இதற்கு பணிந்து விடாமல் இஸ்ரேல், அமெரிக்க படைகளுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் ஈரானின் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நாடுகளின் பொருளாதார நிலைகள் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹார்முஸ் நீரிணை
ஹார்முஸ் நீரிணைweb

அதோடு உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது உலகளவில் பெரும் எண்ணெய் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தின் (Prince Sultan Air Base) மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில், அமெரிக்காவின் அதிநவீன உளவு மற்றும் கட்டுப்பாட்டு விமானமான E-3 Sentry மிக மோசமாகச் சேதமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், அந்த படங்களில் விமானத்தின் உடல் பகுதி இரண்டாக உடைந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. E-3 Sentry விமானம் வெறும் போர் விமானமாக மட்டும் இல்லாமல் வானில் பறக்கும் கட்டுப்பாட்டு அறை போல செயல்பட்டு வந்தது. இந்த விமானத்தின் முன் பகுதியில் இருக்கும் பெரிய வட்ட வடிவ ரேடார் (Rotodome), 400 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள எதிரி ஏவுகணைகள் மற்றும் விமானங்களைக் கண்டறியும் திறன் கொண்டது.

அமெரிக்க விமானம்
அமெரிக்க விமானம்CENTCOM

இரானுடனான போரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு ஏவுகணை எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்குவதில் இது முக்கியப் பங்கு வகித்த நிலையில், அந்த விமானம் தாக்கப்பட்டுள்ளது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கும் தீவிர காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

US Aircraft Severely Hit in Iran Missile Attack: Photos Emerge
தாக்குதல் நடத்தினால்., அமெரிக்கப் படைகள் சவப்பெட்டிகளில் செல்வார்கள் - தெஹ்ரான் டைம்ஸ் எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com