US Adds 178,000 Jobs; Trade Deficit Drops 55%, Trump Reacts
ட்ரம்ப்கோப்பு படம்

1.78 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்.. ‘மிஸ்டர் டேரிப்’ - தன்னைத்தானே புகழ்ந்த ட்ரம்ப்!

அமெரிக்காவில் 1,78,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவானதும், வர்த்தகப் பற்றாக்குறை 55 சதவீதம் குறைந்ததையும் முன்னிட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
Published on

அமெரிக்காவின் புதிய வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை குறைந்தது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார்.நேற்று வெளியான புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் 1,78,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது நாட்டின் பொருளாதார வலிமையைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்x

மேலும், அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை முன்னெப்போதும் இல்லாத வகையில் 55% சரிந்துள்ளது. இது வரலாற்றிலேயே மிகப்பெரிய வீழ்ச்சியாகும். தனது 'சுங்கவரி' கொள்கையே இதற்குக் காரணம் என்று குறிப்பிட்ட அவர், நகைச்சுவையாகவும் பெருமையாகவும் தன்னை "மிஸ்டர் டேரிப்" என்று அழைத்துக் கொண்டுள்ளார். பொருளாதார வெற்றிகளோடு, சர்வதேச அரசியலிலும் தனது அரசு சாதித்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

குறிப்பாக, ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வெற்றிகள் அனைத்தும் அமெரிக்காவை மீண்டும் ஒரு வல்லரசாக மாற்றுவதற்கான தனது பயணத்தின் ஒரு பகுதி என்று அவர் பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில், தனது பொருளாதாரக் கொள்கைகள் எதிர்பார்த்த பலனைத் தருவதாக ட்ரம்ப் தரப்பு தொடர்ந்து வாதிட்டு வருகிறது.

US Adds 178,000 Jobs; Trade Deficit Drops 55%, Trump Reacts
மேற்காசியப் போரால் ஏழை நாடுகளுக்கு பாதிப்பு.. ஐநா எச்சரிக்கை.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com