அமெரிக்கா கலிஃபோர்னியாவில் குளிர்காலத்தில் திடீரென பற்றிகொண்ட காட்டுத் தீ

அமெரிக்கா கலிஃபோர்னியாவில் குளிர்காலத்தில் திடீரென பற்றிகொண்ட காட்டுத் தீ
அமெரிக்கா கலிஃபோர்னியாவில் குளிர்காலத்தில் திடீரென பற்றிகொண்ட காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ பற்றி எரிவதை தொடர்ந்து, அங்கு பதற்றம் நிலவிவருகிறது. பலத்த காற்றும் வீசுவதால், தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அங்கு தீயணைப்பில் ஈடுபட்டிருக்கும் மீட்புக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த காட்டுத்தீ, தெற்கு கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்செல்ஸ் பகுதிக்கு அருகிலும், லாகுனா கடற்கரையின் தென் பகுதியிலும் ஏற்பட்டிருக்கிறது. தொடர் வறட்சி, மோசமான வானிலை ஆகியவை, அப்பகுதியில் குளிர் காலத்தைகூட வெயில் காலமாகவே காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தெற்கு கலிஃபோர்னியா பகுதியில், குளிர் காலமான இந்த பருவத்திலும் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது, பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த காட்டுத்தீயால், அருகிலிருந்த பல வீடுகளும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு அங்கு புராதனச் சின்னமாக இருக்கும் பசிபிக் கடற்கரை நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முன்னெச்சரிக்கைக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com