\
வடகொரியா விவகாரம் : இன்று கூடுகிறது ஐ.நா சபை

வடகொரியா விவகாரம் : இன்று கூடுகிறது ஐ.நா சபை

வடகொரியா விவகாரம் : இன்று கூடுகிறது ஐ.நா சபை
Published on

தொடர் அணுகுண்டு சோதனைகளில் ஈடுபடும் வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அமெரிக்கா, பிரிட்டன், தென்கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளையடுத்து ஐ.நா. சபை இன்று கூடுகிறது.

ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி தொடர் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் வடகொரியா மேற்கொண்ட ஹைட்ரஜன் குண்டு சோதனை உலக நாடுகளின் மத்தியில் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணையை பறக்கவிட்டது, தென்கொரியாவை மீரட்டுவது போன்ற செயல்களை மேற்கொள்வது என வடகொரியாவின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சக்திவாய்ந்த அணு குண்டு ஒன்றினை சுங்கிபேகாம் என்ற இடத்தில் நேற்று வடகொரியா சோதித்துள்ளத்தால், அங்கு சுமார் 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்துள்ள தென்கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஐ.நாவை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து வடகொரியா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இன்று ஐ.நா சபை கூட்டப்படுகிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com