இந்தியாவுடன் ராணுவ உறவை மேம்பாடுத்தும் மசோதா: அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
இந்தியாவுடன் ராணுவ உறவை மேம்பாடுத்தும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பான மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இம்சோதா 344-க்கு 81 என்று வாக்கு கணக்கில் நிறைவேறியது 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு செலவின மசோதாவின் ஒரு பிரிவாக இந்தியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அம்சமும் இடம் பெற்றிருந்தது.
இம்மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய உறுப்பினர் அமி பெரா, உலகின் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும் இடையில் வலுவான உறவு இருப்பது அவசியம் என்றார். இதற்கிடையில் பாகிஸ்தானுக்கு நிதயுதவி வழங்குவதற்கான நிபந்தனைகளையும் அமெரிக்க நாடாளுமன்றம் கடுமையாக்கியுள்ளது.
முன்னதாக அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறையில் அமெரிக்கா - இந்தியா இடையே ஒத்துழைப்புக்கு பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் சில முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் போடப்பட்டன. குறிப்பாக இரண்டு முதல் மூன்று பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கார்டியன் ட்ரோன் எனும் 22 ஆளில்லா உளவு விமானங்கள் இந்திய கடற்படைக்காக வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.