உலகம்
ரஷ்ய பணக்காரர்களின் சொத்துகள் குறித்து விசாரிக்க குழு அமைத்தது அமெரிக்கா
ரஷ்ய பணக்காரர்களின் சொத்துகள் குறித்து விசாரிக்க குழு அமைத்தது அமெரிக்கா
ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களின் சொத்துகள் குறித்து விசாரிப்பதற்காக, குழு ஒன்றை அமெரிக்கா நியமித்துள்ளது.
அலிகார்க்ஸ் என்பவர்கள் ரஷ்யாவில் இருக்கும் பணக்கார குடும்பங்கள். சோவியத் காலத்தில் இருந்தே ரஷ்ய அரசின் முடிவுகளில் தலையிட்டு வருகின்றனர். இவர்களின் சம்பந்தம் இன்றி, ரஷ்யாவில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது. இந்த போருக்கும் கூட இவர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.
இதனால் இவர்களின் சொத்துகளை முடக்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதற்கான குழுவை அமெரிக்க நியமித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களின் சொத்துகள், நிறுவனங்கள் போன்றவற்றை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க: ரஷ்யா போரை நிறுத்துமாறு ஐ.நா.வில் தீர்மானம்... இந்தியா என்ன நிலைப்பாடு தெரியுமா?