அமெரிக்கா: இருமிய வேகத்தில் வயிற்றில் இருந்து வெளியே வந்த குடல்.. அதிர்ச்சியில் உறைந்த முதியவர்!

ப்ளோரிடாவில் 63 வயது முதியவரின் குடல் வெளியே வந்த அதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடல்  மாதிரி
குடல் மாதிரிபுதியதலைமுறை

ப்ளோரிடா மாகாணத்தில் 63 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இரும்பும்போது அவரது குடல் வெளியே வந்து விழுந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவர், மருத்துவமனைக்கு செல்ல, மருத்துவர்கள் அவரின் குடலை மீண்டும் அவரது வயிற்றுக்குள் வைத்து தைத்து அவரை குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

தும்மல் வந்தாலோ அல்லது இருமல் வந்தாலோ நம்மால் கட்டுப்படுத்த முடியாது. சிலர் இரும்பும் போது அடி வயிற்றிலிருந்து இருமுவர். அப்படி இரும்பும் போது வயிற்றிலிருந்த குடல் வெளியே வந்து விழுந்தால் எப்படி இருக்கும்? நினைக்கும்போதே பயங்கரமாக இருக்கிறதல்லவா? ஆம் அப்படி ஒரு சம்பவம் தான் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்துள்ளது.

குடல்  மாதிரி
உ.பி: மதுபோதையில் வாய்த் தகராறில் ஈடுபட்ட நண்பர்கள்; கொலையில் முடிந்த துயரம்!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவருக்கு, சமீபத்தில் சிறுநீரக புற்றுநோய் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்தவர், உடல் குணமடைந்ததும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தையல் பிரிக்கப்பட்டு பூரணமாக நலமான பிறகு முதியவரும் அவரின் மனைவியும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி இருக்கின்றார்.

சிறு நீரக புற்று நோய்
சிறு நீரக புற்று நோய்

அடுத்த சில நாட்களில், அவர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. முதியவரும், அவரது மனைவியும் காலை உணவை எடுத்துக்கொண்டுள்ளார். அப்பொழுது அவருக்கு இருமல் வந்துள்ளது. அவரும் வேகமாக இரும்மியும் இருக்கிறார். அப்பொழுது அவருக்கு அடிவயிறு குடலானது தனியாக மேலே வருவது போன்ற உணர்வு வந்துள்ளது.

அதைத்தொடர்ந்து அவருக்கு போடப்பட்ட காயத்தின் தையலை பிளந்துக்கொண்டு குடலானது வெளியே வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வெளியே வந்த தனது குடலை சட்டையால் இறுகக்கட்டி, ஆம்புலன்ஸின் உதவியுடன் மருத்துவமனை விரைந்துள்ளார். அங்கு ,மருத்துவர்கள் அவரின் குடலை மீண்டும் உள்ளே வைத்து தைத்து, அவரை குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இப்பொழுது அந்த முதியவர் நலமுடம் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com