’எதிர்பாக்கலல.. இப்டி வருவனு எதிர்பாக்கலல’ -புறாவை தாக்க போன பூனையின் வியக்கத்தகு செயல்!

’எதிர்பாக்கலல.. இப்டி வருவனு எதிர்பாக்கலல’ -புறாவை தாக்க போன பூனையின் வியக்கத்தகு செயல்!
’எதிர்பாக்கலல.. இப்டி வருவனு எதிர்பாக்கலல’ -புறாவை தாக்க போன பூனையின் வியக்கத்தகு செயல்!

செல்லப்பிராணிகளின் சேட்டைகளுக்கு எப்போதும் எல்லையே இருக்காது. பொதுவெளியில் விலங்குகளுக்கு இடையே நடக்கும் சில குறும்புத்தனமான சண்டைகளும் எவரையும் கவருவதில் தவருவதில்லை.

அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு ரசிக்கவும் செய்யும்.

அந்த வகையில், கூடாரத்தின் மீது இருந்த வெள்ளைப் புறா ஒன்றை சீண்ட புலியை போல பதுங்கி பதுங்கி பாய எத்தனித்த பூனையின் செயல் நெட்டிசன்களை ஒருசேர அதிர்ச்சிக்கவும், ஆச்சர்யத்தில் ஆழ்த்தவும் செய்திருக்கிறது.

18 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட அந்த வீடியோவில், பூனை ஒன்று புறாவை தாக்குவது போல ஊர்ந்து சென்றுக் கொண்டிருக்க, அந்த புறா திடீரென திரும்பி பார்த்ததும் கிட்ட சென்று அதன் அலகின் மீது வாஞ்சையாக முத்தமிட்டு செல்கிறது அந்த பூனை.

இதனை பகிர்ந்த இணையவாசிகள் இந்த கிளைமாக்ஸை எதிர்பாக்கலையே என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், சாதுவான, மென்மையான உயிரினங்களை விலங்குகள் வேட்டையாடாது எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டிருக்கிறார்கள். இந்த கமெண்ட்டிற்கு சிலர் ஆட்சேபனையும் தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com