லெபனான் நாட்டுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை மாவு உதவி

லெபனான் நாட்டுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை மாவு உதவி
லெபனான் நாட்டுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை மாவு உதவி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் துறைமுக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் காரணமாகவே வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்தது. அந்த விபத்தில் பெய்ரூட் நகரமே தலைகீழாக மாறிப்போனது. அங்கு அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த வெடிவிபத்தில் உணவு சேமிப்புக் கிடங்குகளும் எரிந்து சாம்பலாயின. எனவே அங்கு கோதுமை விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் ஐநா உதவிக்கரம் நீட்டியுள்ளது. அதன்படி 50,000 டன் கோதுமை மாவை பெய்ரூட்டுக்கு உலக உணவுத் திட்டம் அனுப்பும் என்று மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

லெபனான் அரசு எதிர்வரும் நாட்களுக்குத் தேவையான உணவு தானியங்களை சேமிப்பாக வைத்திருக்கவில்லை. மேலும் ஓரே உணவு தானியக்கிடங்கும் அழிந்துவிட்ட காரணத்தாலும் மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவி செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com