போர் நிறுத்தம் - ரஷ்யாவின் தீர்மானம் நிராகரிப்பு!

காஸா மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்தை ஐக்கியநாடுகளின் சபை பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்து உள்ளது.

காஸா மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்தை, ஐக்கிய நாடுகளின் சபை பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்து உள்ளது. காஸா இஸ்ரேல் இடையேயான போரில் இருதரப்பிலும் சேர்த்து 4000க்கும் அதிகமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

போர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக ரஷ்யா இத்தீர்மானத்தை கொண்டு வந்திருந்தது. இதில் ஹமாஸ் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை; தீவிரவாத தாக்குதலை கண்டிப்பதாக மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே இத்தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com