வட கொரியா மீது ஐநா புதிய பொருளாதார தடை - ரூ.6,500 கோடி வருவாய் இழப்பு
சர்வதேச எதிர்ப்பையும் மீறி ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐநா விதித்துள்ளது.
பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்காவின் இந்த தீர்மானம், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்படி வடகொரியாவில் இருந்து இரும்பு, நிலக்கரி, மீன் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வடகொரியாவிற்கு ஆண்டுதோறும் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு நேரிடும்.
முன்னதாக, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வடகொரியாவுக்கு பயணம் செய்யவோ, வடகொரியா வழியாக வேறு நாடுகளுக்கு பயணம் செய்யவோ அமெரிக்கர்களுக்கு அனுமதி கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதையும் மீறி அமெரிக்க குடிமகன்கள் யாரேனும் வடகொரியா செல்ல விரும்பினால் சிறப்பு அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.