UN Security Council adopts US resolution on Trumps Gaza plan
UN Security Council reuters

காஸா அமைதி ஒப்பந்தம்.. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு.. ஹமாஸ் எதிர்ப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் காஸா அமைதித் திட்டத்திற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்களித்துள்ளது.
Published on
Summary

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் காஸா அமைதித் திட்டத்திற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்களித்துள்ளது.

இஸ்ரேலும் ஹமாஸும் திட்டத்தின் அமைதியை முன்னெடுக்கும் வகையில், தங்கள் இரண்டு ஆண்டுகால போரை நிறுத்தி, ஒப்பந்தத்திற்கு அவசியமானதாகக் கருதப்படும் பணயக்கைதிகள்-விடுதலை ஒப்பந்தத்தை அங்கீகரித்தன. இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்களித்துள்ளது.

UN Security Council adopts US resolution on Trumps Gaza plan
trump messagetrump

இந்தத் தீர்மானத்திற்கு இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சோமாலியா உட்பட 13 நாடுகள் ஆதரவு தெரிவித்தன, யாரும் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. ரஷ்யாவும் சீனாவும் வாக்களிக்கவில்லை. ஆனால், இந்த தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஹமாஸ், "பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது" என்றும், காஸா மீது சர்வதேச அறங்காவலர் பதவியை திணிக்க முயற்சிக்கிறது என்றும் கூறியது. ஆனால், ஹமாஸின் இந்த முடிவை பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. மறுபுறம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வாக்கெடுப்பை வரவேற்ற ட்ரம்ப், தனது சமூக ஊடக தளத்தில் ஒரு நீண்ட செய்தியை வெளியிட்டார். இந்த முடிவை உலகளாவிய ராஜதந்திரத்திற்கான ஒரு மைல்கல் என்று வர்ணித்த அவர், இந்த நடவடிக்கையை ஆதரித்த நாடுகளைப் பாராட்டினார். அதேநேரத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அரசை நிராகரிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது. இருந்தபோதும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அது, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த நிலையில், தற்போது அமைந்தி ஒப்பந்தத்திற்குப் பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

UN Security Council adopts US resolution on Trumps Gaza plan
காஸா போர் நிறுத்த 20 அம்ச திட்டம்.. சம்மதம் தெரிவித்த இஸ்ரேல்.. தலைவர்கள் சொல்வது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com