உலகம்
“கடந்த ஆண்டில் மட்டும் 240 கோடி பேர் உணவின்றி தவித்துள்ளனர்” - ஐ.நா அதிர்ச்சி தகவல்!
கடந்த ஆண்டில் மட்டும் 14.8 லட்சம் குழந்தைகள் வளர்ச்சிக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது
உலகம் முழுவதும், கடந்த ஆண்டு 240 கோடி பேர் போதிய உணவின்றி தவித்ததாக, ஐ.நா. அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உலக உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் தொடர்பான ஆய்வறிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் செயல்படும் 5 அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அதில், உலகம் முழுவதும் கடந்த ஆண்டு 240 கோடிக்கும் அதிகமான மக்கள், போதிய உணவு கிடைக்காமல் தவிப்புக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 78.3 லட்சம் பேர் பசி - பட்டினியால் அவதியுற்றதாகவும், 14.8 லட்சம் குழந்தைகள் வளர்ச்சிக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் மேற்காசிய நாடுகளில், 20 சதவீதம் பேர், பசி-பட்டினியால் அவதியுற்றுவருவதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.