உலகம்
ஐநாவின் பொருளாதார தடை: வடகொரிய மக்கள் எதிர்ப்பு பேரணி
ஐநாவின் பொருளாதார தடை: வடகொரிய மக்கள் எதிர்ப்பு பேரணி
ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதாரத் தடைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட கொரியாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினார்கள்.
வடகொரிய தலைநகர் பியாங்யோங்கில் உள்ள கிம் இல் சுங் சதுக்கத்தில், ஐநா சபை விதித்த பொருளாதாரத் தடையை கண்டித்து, ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, மேற்கு நாடுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். நீண்ட தொலைவுக்குப் பேரணியாகச் சென்ற அவர்கள், அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. எந்த தடையும், அழுத்தமும் எங்கள் இருப்பை எதுவும் செய்ய இயலாது. இதுவே எங்கள் தலைவர்கள் அரவணைப்பில் வாழ்ந்து வரும் உழைக்கும் மக்களின் பதில் என்று கூறினார்.