'ரஷ்யாவுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் வித்தியாசமே இல்லை' - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தாக்கு

'ரஷ்யாவுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் வித்தியாசமே இல்லை' - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தாக்கு
'ரஷ்யாவுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் வித்தியாசமே இல்லை' - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தாக்கு

உக்ரைனில் போர்த் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கடுமையாக விமர்சித்து குற்றம்சாட்டியுள்ளார்.

ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் செலன்ஸ்கி காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது, உக்ரைனில் போர்த்தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப்படையினர், அப்பாவிப் பொதுமக்களைக் கைகால்களை வெட்டியும் கழுத்தை அறுத்தும் கொடூரமாகக் கொன்று குவிப்பதாகக் குற்றம்சாட்டினார். பெண்கள் அவர்களது குழந்தைகளின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற கொடுமைகளை இழைக்கும் ரஷ்யப்படையினருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்று செலன்ஸ்கி சாடினார்.

புச்சா நகரில் வீதிகளில் பொதுமக்களின் உடல்கள் கிடக்கும் புகைப்படங்கள், வெறும் உதாரணத்துக்காகவே வெளியிடப்பட்டதாகவும், இதேபோன்ற ஏராளமான கொடுமைகள் உக்ரைனில் நிகழ்ந்திருப்பதாக அவர் கூறினார். ஐ.நா.பாதுகாப்புச் சபையால் பாதுகாப்பு குறித்து அளிக்கப்பட்ட உத்தரவாதம் எங்கே போனது என்றும் செலன்ஸ்கி கேள்வி எழுப்பினார். ரஷ்ய ராணுவம் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க: நூற்றுக்கணக்கான சடலங்களுடன் உக்ரைனின் புக்கா நகரம்... ரஷ்யாவின் பதில்தான் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com