\
ரஷ்ய தாக்குதலில் 97 குழந்தைகள் உயிரிழப்பு - செலன்ஸ்கி

ரஷ்ய தாக்குதலில் 97 குழந்தைகள் உயிரிழப்பு - செலன்ஸ்கி

ரஷ்ய தாக்குதலில் 97 குழந்தைகள் உயிரிழப்பு - செலன்ஸ்கி
Published on

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர்த் தாக்குதலால் 97 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தில், அந்நாட்டு உறுப்பினர்களிடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார். அப்போது தங்கள் நாட்டுக்கு கனடா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி கூறினார். உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா அடுத்தடுத்து மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டிய செலன்ஸ்கி, ரஷ்யாவின் அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறினார்.

உக்ரைன் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்து விளக்கிய அவர், போரினால் உக்ரைனில் 97 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டார்.

இதையும் படிக்க: உக்ரைன் டிவி டவர் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் - 9 பேர் உயிரிழப்பு

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com