ரஷ்யாவின் பீரங்கிகள் அணிவகுப்பை நிறுத்த முயன்ற உக்ரைனின் 'தனி ஒருவன்' - வைரல் வீடியோ
கீவ் நகரில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு தனிநபர், ரஷ்ய நாட்டின் ராணுவ பிரங்கிகள் அணிவகுப்பை நிறுத்த முயன்ற சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகரான கீவ்க்குள் சென்று வான்வழி, தரைவழி தாக்குதலை முடுக்கியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கே கடுமையான சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் வீடியோவில், ரஷ்யவின் டாங்கிகள் உக்ரைன் தலைநகரான கீவ்-க்குள் முன்னேறி வரும்போது ஒரு நபர் அவற்றின் முன் நின்று மறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில், உக்ரைன் நிலை குறித்து நேற்று பேசிய ஜனாதிபதி, “நான் முற்றிலும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இந்த இரவு பகலை விட கடினமாக இருக்கும். எங்கள் மாநிலத்தின் பல நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன, எங்கள் நாட்டிற்கு அதிக அளவில் உதவி மற்றும் ஆதரவு தேவை" என தெரிவித்தார்
மேலும், நேற்று அவர் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உட்பட பல மேற்கத்திய தலைவர்களுடன் பேசியதாக கூறினார்.