சோகத்தில் முடிந்த பாராசூட்டில் பறக்கும் முயற்சி ! பலியான சிறுவன்
உக்ரைன் நாட்டில் சொந்தமாக பாராசூட் செய்து சாதனை படைக்க முயற்சி செய்த 15 வயது சிறுவன் சோதனையின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டில் மக்கீவ்கா நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் சொந்தமாக பாராசூட் செய்து பறக்கவிட்டி சாதனை படைக்க முயற்சி செய்தார்.
இதற்காக அவர் வீட்டிலேயே பாராசூட் ஒன்றை தயார் செய்து அதை பரிசோதிக்க முடிவு செய்தார். இதற்காக வீட்டின் அருகே உள்ள 14 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்று பறக்க முற்பட்டார்.
இதைப்பார்க்க சிறுவனின் தாய், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு குவிந்தனர். இதையடுத்து உற்சாகம் அடைந்த அந்த சிறுவன் தனது இரு கைகளையும் உயர்த்தி காட்டியபடி, மாடியில் இருந்து கீழே குதித்தார். ஆனால் பாராசூட் முறையாக இயங்காததால் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிறுவன் பாராசூட்டை முறையாக தயார் செய்யாததால் இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.