`வீதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது ரஷ்யா’- உக்ரைன் வெளியிட்ட வீடியோ ஆதாரம்!

`வீதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது ரஷ்யா’- உக்ரைன் வெளியிட்ட வீடியோ ஆதாரம்!
`வீதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது ரஷ்யா’- உக்ரைன் வெளியிட்ட வீடியோ ஆதாரம்!

ரஷ்ய ராணுவ வீரர்கள், தங்கள் நாட்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டிய உக்ரைன் அவை தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் பிடியில் இருக்கும் உக்ரைனின் கெர்சன் நகரில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த ரஷ்ய வீரர்கள், திடீரென கையெறி புகைக்குண்டுகளை வீசியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கு துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த திடீர் தாக்குதலில் ஒருவருக்கு காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல் தெடர்பான வீடியோவை வெளியிட்டிருக்கும் உக்ரைன் அரசு, ரஷ்ய வீரர்கள் பொதுமக்களிடம் வன்முறையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக நேற்றைய தினம், `ரஷ்யா விடுக்கும் இறுதி எச்சரிக்கை என்ற மிரட்டல்களை உக்ரைன் அரசு பணியாது’ என அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com