உலகம்
உக்ரைனுக்கு ஆதரவாக ஜொலிக்கும் பாரிஸ் நகர கட்டடங்கள்
உக்ரைனுக்கு ஆதரவாக ஜொலிக்கும் பாரிஸ் நகர கட்டடங்கள்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பழமையான கட்டடங்கள் உக்ரைன் தேசியக் கொடியின் வண்ணத்தில் ஒளிர்கின்றன.
உக்ரைனில் போர் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அமைதி நிலவிட வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. பிரான்சும் இதையே விரும்புகிறது. உக்ரைன் மக்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், பாரிஸில் உள்ள பழமையான கட்டடங்கள் மீது உக்ரைனின் தேசியக் கொடியின் வண்ணத்தில் ஒளியைப் பாய்ச்சி தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
மஞ்சள் மற்றும் நீல வண்ணத்தில் ஜொலிக்கும் கட்டடங்களின் முன் பிரான்ஸ் மக்கள் தங்கள் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.