மீண்டும் அழைப்புவிடுத்த ரஷ்யா... கண்டிஷன் போட்ட உக்ரைன்! பேச்சுவார்த்தை நடக்குமா?

மீண்டும் அழைப்புவிடுத்த ரஷ்யா... கண்டிஷன் போட்ட உக்ரைன்! பேச்சுவார்த்தை நடக்குமா?

மீண்டும் அழைப்புவிடுத்த ரஷ்யா... கண்டிஷன் போட்ட உக்ரைன்! பேச்சுவார்த்தை நடக்குமா?
Published on

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், தங்களுக்கு அந்த இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த உடன்பாடில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா சில நிமிடங்களுக்கு முன் கூறியிருந்தது. அதன்படி, “உக்ரைன் நாட்டுடன், பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்” என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிவித்திருந்தது. உக்ரைனில் தீவிரமாக போரில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் பேச்சுவார்த்தைக்கும் முயற்சிக்கும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை பேசுபொருளானது.

முன்னதாக இன்று காலை உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவத்தினர் முழுமையாக நுழைந்தனர். உக்ரைன் அரசு மக்களிடம் ஆயுதங்களை வழங்கியுள்ளதால், ரஷ்ய படைகள் மீது வீட்டில் இருந்தபடியே உக்ரைனால் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனையடுத்து ரஷ்ய ராணுவம் பதிலுக்கு தாக்கி வருகின்றது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ரஷ்யாவின் இந்த அழைப்பை நிராகரித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “உக்ரைன் மீது தாக்குதல் நடத்த பெலாரஸ் பயன்படுத்தப்படுவதால் அங்கு பேச்சுவார்த்தை நடத்த முடியாது” என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறுயுள்ளார். மேலும் ``ஹிட்லரை ஒன்றிணைந்து வீழ்த்தியது போல் புடினையும் வீழ்த்துவோம்” என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை 5 நாட்டு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நடத்தலாம் என ரஷ்யாவுக்கு உக்ரைன் யோசனை தெரிவித்துள்ளது.
வார்சா, பிராட்டிஸ்லோவா, புடாபெஸ்ட், இஸ்தான்புல், பாகு ஆகிய நகரங்களை உக்ரைன் பரிந்துரைத்துள்ளது.

உக்ரைனில் கெர்சான், பெர்டியான்ஸ்க், கெனிஷெஸ்க், செர்னோபேவ்கா ஆகிய 4 பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் படைகளின் ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும், 471 உக்ரைன் வீரர்கள் தங்களிடம் சரணடைந்துள்ளதாகவும் ரஷ்ய படைகள் அறிவித்துள்ளது. அத்துடன், சரணடைந்த உக்ரைன் வீரர்களை உரிய மரியாதையோடு நடத்த உள்ளதாகவும் தேவையான உதவிகளை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com