உலகம்
மதுபான விடுதியை கபளீகரம் செய்த கால்பந்து ரசிகர்கள்: 52 பேர் கைது
மதுபான விடுதியை கபளீகரம் செய்த கால்பந்து ரசிகர்கள்: 52 பேர் கைது
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் போது, மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்ட 52 ரசிகர்களை உக்ரைன் காவல்துறை கைது செய்துள்ளனர்.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் உக்ரைனை சேர்ந்த ஷக்டார் டோனட்ஸ்க், மற்றும் நெர்லாந்தை சேர்ந்த ஃபேயநூர்டு அணிகள் நேற்று மோதின. இந்தப்போட்டியில் டோனட்ஸ்க் அணி மூன்றுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் விளைவாக போட்டி நடைபெற்ற கார்கிவ் நகரில் உள்ள மதுபான விடுதியில் இருநாட்டு ரசிகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மதுபான விடுதியின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் இறங்கிய நெதர்லாந்து நாட்டு ரசிகர்கள் 40 பேர் உட்பட 52 பேரை உக்ரைன் காவல்துறையினர் கைது செய்தனர்.