உக்ரைனில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உக்ரைனில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
உக்ரைனில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ரஷ்யாவுடனான போரின் காரணமாக உக்ரைனில் புதிய கொரோனா தொற்றுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு மக்கள் அதிகளவு அண்டை நாடுகளுக்கு வெளியேறுவதால் தொற்று பரவ வாய்ப்பு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுடன் தொடர்ந்து போர் புரிந்து வருவதால் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும், உக்ரைன் சுகாதாரத்துறை நிறுத்தியுள்ளது. போரால் பாதிக்கப்படும் மக்கள் மற்றும் போரில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் மருத்துவமனைகளில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக கொரோனா சோதனைப் பணிகளும் அதற்கான சிகிச்சைப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த காரணங்கள் அனைத்தும் உக்ரைனில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற பல நாடுகளைப் போலவே, உக்ரைனிலும் பொது சுகாதார ஆய்வகங்கள் உள்ளன. அவை விலங்குகள் மற்றும் மனிதர்களை பாதிக்கும் ஆபத்தான நோய்களின் அச்சுறுத்தல்களை எவ்வாறு குறைப்பது என்று ஆராய்ச்சி செய்கின்றன. ஆனால் ரஷ்யாவுடனான போர் அங்கு சுகாதார நடவடிக்கைகளை கடுமையாக பாதித்துள்ளது. இதன் விளைவாக கொரோனா பரவல் அடுத்த அலையாக உருவெடுக்கும் பட்சத்தில் அது உக்ரைனை மேலும் கடுமையாக பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com