\
Ukraine rejected ceasefire terms proposed by the US
Ukraine rejected ceasefire terms proposed by the USReuters

"இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது" : அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்த உக்ரைன்.. பின்னணி என்ன?

அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த நிபந்தனையை உக்ரைன் நிராகரித்துள்ளது.
Published on: 
Summary

உக்ரைனின் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்கும் அமெரிக்க நிபந்தனையை நிராகரித்த ஜெலன்ஸ்கி, நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது எனத் தெரிவித்தார். இந்த முடிவு அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் ஆட்சிக்கு வந்த ஜெலன்ஸ்கி உக்ரைனை நேட்டோவில் இணைக்க முயன்றார். ஆனால் இதனை ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக பார்த்த ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது படையெடுத்தார்.

இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக வந்த நேட்டோவில் உறுப்பினராக உள்ள அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனால் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட போர் ஆண்டுகள் தாண்டியும் தொடர்ந்து வருகிறது.

Reuters

எனினும் ரஷ்யா உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. நவம்பர் 2026 நிலவரப்படி, உக்ரைனின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 19 சதவீதம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2014-இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியமான கிரிமியா ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. போர் தொடங்கியதும் உக்ரைனின் லுஹான்ஸ்க் (Luhansk) பிராந்தியத்தின் கிட்டத்தட்ட 99 சதவீத பகுதியை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. அதே போல டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தின் 75 சதவீத பகுதி ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் சப்போரிஜியா (Zaporizhzhia), கெர்சன் (Kherson) பகுதிகளின் 70 சதவீத கட்டுப்பாடும் ரஷ்யா வசம் உள்ளது.

இந்த சூழலில் கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு மாகாணங்களை உள்ளடக்கிய டன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை ரஷ்யாவிடம் வழங்கி போரை முடிவுக்கு கொண்டுவந்தால் உக்ரைனை நேட்டோவில் உறுப்பினராக சேர்த்துக்கொள்வதாக அமெரிக்கா முக்கிய நிபந்தனை ஒன்றை விதித்தது. அமெரிக்காவின் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவின் நிபந்தனையை முற்றிலும் நிராகரிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், உக்ரைனின் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்கும் வகையிலான எந்தவொரு முடிவையும் ஏற்க முடியாது என்றும், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் சமரசம் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். உக்ரைனின் இந்த அறிவிப்பு அமெரிக்க அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Ukraine rejected ceasefire terms proposed by the US
நேட்டோ ராணுவ தலைமையகத்தில் ஊடுருவல் : அம்பலமான ரஷ்யாவின் முயற்சி... அதிர்ந்து போன ஐரோப்பா!