உலகம்
இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு அருகேயிருக்கும், வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் அருகே இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்தன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து, நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே 400க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.