\
UK MPs support bangladesh former PM Sheikh Hasina
Sheikh HasinaREUTERS

ஷேக் ஹசீனா நாடு திரும்பினால் நிறைவேறும் மரண தண்டனை.. எதிர்ப்பு தெரிவிக்கும் UK எம்.பிக்கள்!

மரண தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சொந்த நாட்டிற்கு திரும்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர். காரணம் என்ன?... பார்க்கலாம்...
Published on: 

கடந்த 2024ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாணவர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது அரசின் பாதுகாப்புப் படை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டதாக சொல்லப்படும் நிலையில், போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை, அப்போதைய வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்ய வைத்தது. உடனடியாக பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி தப்பியோடினார். சில நாட்களுக்கு அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த சூழலில், ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார் என உறுதிப்படுத்தப்பட்டது.

Petrol bomb attack at bangladesh Shakib Al Hasans home after joining Hasina presser
sheikh hasinaPTI

இந்நிலையில், வங்கதேச வன்முறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஷேக் ஹசீனாவை மீண்டும் தங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டுமென, இந்தியாவுக்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து நாடு திரும்பினால், தாம் கொல்லப்படலாம் என அச்சம் தெரிவித்திருந்த ஹசீனா, லண்டனைச் சேர்ந்த சட்ட நிறுவனம் ஒன்றின் மூலமாக இந்தியாவில் இருக்கும் வங்கதேச தூதரகத்தில் பாஸ்போர்ட் கோரி அண்மையில் விண்ணப்பித்திருந்தார். நாட்டைவிட்டு தப்பியோடியதால் அவரது பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவை அப்போதே ரத்து செய்யப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவை இரு நாடுகளுக்கும் இடையேயான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு வங்கதேசம் கோரியிருந்தது. மேலும் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாக இங்கிலாந்து எம்.பி.க்கள் குரல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக தங்கள் நாட்டின் வெளியுறவு செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கக் கூடிய இங்கிலாந்தின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

sheikh hasina
sheikh hasinaPTI

ஷேக் ஹசீனா தரப்பில் அவர் தனக்கு விருப்பமான வழக்கறிஞரை வைத்து வாதாட அவருக்கு உரிமை வழங்கப்படாமலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நீதி வழங்கும் நடைமுறைகளும், சட்ட நடவடிக்கைகளும் அரசியல் பழிவாங்கல், மோதல்களுக்கு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதால், நியாயமான விசாரணை மற்றும் சட்டப் பாதுகாப்பை ஷேக் ஹசீனாவுக்கு உறுதி செய்ய வேண்டும். அதற்காக வங்கதேச அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைப் பெற வேண்டுமென தெரிவித்திருக்கின்றனர் இங்கிலாந்து எம்.பி.க்கள்.