இங்கிலாந்தை தாக்கிய யூனிஸ் புயல்.. இருளில் மூழ்கிய 4 லட்சம் மக்கள்!

இங்கிலாந்தை தாக்கிய யூனிஸ் புயல்.. இருளில் மூழ்கிய 4 லட்சம் மக்கள்!

இங்கிலாந்தை தாக்கிய யூனிஸ் புயல்.. இருளில் மூழ்கிய 4 லட்சம் மக்கள்!
Published on

யூனிஸ் புயலால் இங்கிலாந்தில் சுமார் 400,000 மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவை யூனிஸ் புயல் தாக்கியது. கடந்த காலங்களை விட அதீத பாதிப்புகளை ஏற்படுத்திய புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. பிரிட்டனில் சுமார் 400,000 மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் மின்ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அயர்லாந்து, பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் மரங்கள் விழுந்ததில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

இங்கிலாந்தின் வெல்ஸ் பகுதியில் உள்ள தேவாலயத்தின் கோபுரம் சேதமடைந்தது. ஏராளமான மரங்கள் சாய்ந்து, கட்டிடங்கள் சேதமடைந்தன. லண்டன் முழுவதும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com